< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் நடுரோட்டில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை
தேசிய செய்திகள்

பெங்களூருவில் நடுரோட்டில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

தினத்தந்தி
|
2 July 2024 1:31 AM IST

பெண்ணுக்கு, மர்மநபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

பெங்களூரு,

பெங்களூரு பீனியா அருகே எச்.எம்.டி. லே-அவுட்டில் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இங்கு கல்லூரி மாணவிகள் உள்பட பெண்கள் பலர் தங்கி உள்ளனர். இங்கு அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படிக்கும் மாணவி ஒருவர் தங்கி உள்ளார். அவர் நேற்று விடுதி அருகே உள்ள ஜூஸ் கடைக்கு சென்றார். அவர் ஜூஸ் குடித்துவிட்டு சாலையோரம் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த சம்பவத்தால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் இதுகுறித்து பீனியா போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்ணுக்கு, மர்மநபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே விஜயநகர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் முன்பு இதேபோல் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவாகி உள்ளது. தற்போது மற்றொரு சம்பவம் அதேபோல நடந்துள்ளது. மெட்ரோ ரெயில்கள், பஸ்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை புகார்கள் எழுந்து வந்தநிலையில், பொது இடங்களில் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்