< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லி விமான நிலையத்தில் விலை உயர்ந்த நகைகளுடன் பிடிபட்ட பெண் பயணி -போலீசார் விசாரணை
|13 April 2024 8:54 AM IST
பயணி வைத்திருந்த கைப்பையில் விலை உயர்ந்த 671 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் இருப்பதை கண்டறிந்தனர்.
புதுடெல்லி,
மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து டெல்லி விமான நிலையம் வந்து இறங்கிய இந்திய பெண் பயணி ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த பயணி வைத்திருந்த கைப்பையில் விலை உயர்ந்த 671 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் இருப்பதை கண்டறிந்தனர்.
மேலும் அவர் வைத்திருந்த கைப்பையும் மிகவும் விலை உயர்ந்தது என தெரியவந்தது. இவற்றை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்கான உரிய அனுமதியை அவர் பெறாததும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறி அவர் நகைகளை கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பெண்ணை கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றன.