< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருமண நிச்சயதார்த்த விழாவில் மாப்பிள்ளை மீது திராவகம் வீசிய இளம்பெண்
|25 April 2024 7:48 AM IST
உத்தர பிரதேச மாநிலத்தில் நிச்சயதார்த்த விழாவின் போது மாப்பிள்ளை மீது இளம்பெண் ஒருவர் திராவகம் வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பால்லியா,
உத்தரபிரதேச மாநிலம் பால்லியா மாவட்டத்தில் உள்ளது சிகிடாவுனி கிராமம். இங்கு வசிக்கும் ராகேஷ் பிந்த்(வயது26) என்பவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது அதே ஊரை சேர்ந்த 24 வயது இளம்பெண் லட்சுமி அங்கு வந்தார்.
அவர் ஒரு பையில், கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திராவகத்தை வைத்திருந்தார். திடீரென மாப்பிள்ளை மீது, அந்த திராவகத்தை வீசினார். இதில் ராகேஷின் முகம் மற்றும் சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கிருந்தவர்கள் லட்சுமியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இளம்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். லட்சுமி, ராகேஷை விரும்பி வந்ததாகவும், அவர் வேறு பெண்ணை திருமணம் செய்ய இருந்ததால் அதிருப்தி அடைந்த லட்சுமி, அவர் மீது திராவகம் வீசியதும் தெரியவந்தது.