< Back
தேசிய செய்திகள்
விடிஞ்சா கல்யாணம்.. இரவில் நடந்த திடீர் தாக்குதல்.. மனமுடைந்த மணப்பெண் தற்கொலை
தேசிய செய்திகள்

விடிஞ்சா கல்யாணம்.. இரவில் நடந்த திடீர் தாக்குதல்.. மனமுடைந்த மணப்பெண் தற்கொலை

தினத்தந்தி
|
30 Nov 2023 6:33 PM IST

அடையாளம் தெரியாத 4 நபர்கள் மணப்பெண்ணின் அறைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதால் மண்டபத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் மாவட்டத்தில் நேற்று இரவு மணப்பெண் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாயல் கார்டன் திருமண மண்டபத்தில் நேற்று இரவு திருமணத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தார் மணப்பெண் சலோனி ஜெயின் (வயது 21). அந்த நேரத்தில் அடையாளம் தெரியாத 4 நபர்கள் திடீரென்று மணப்பெண்ணின் அறைக்குள் நுழைந்தனர். பின்னர் அங்கு இருந்த சலோனி, அவரது தாயார் மற்றும் பியூட்டிசியனை தாக்கினர். இதனால் மண்டபத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு சலோனி மனமுடைந்து விஷம் குடித்துள்ளார். அதனால் மயங்கி விழுந்த அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

இந்த சம்பவம் பற்றி அறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, மண்டபத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்