குடும்ப தகராறில் தலையில் கல்லைப்போட்டு பெண் கொலை: கணவர் கைது
|தம்பதி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு கெங்கேரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜடகரஹள்ளியில் உள்ள காலி இடத்தில் நேற்று காலையில் ஒரு பெண் தலை நசுங்கிய படியும், கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள், கெங்கேரி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அவரது பெயர் கவுரி (வயது 30) என்பதாகும். கவுரி மைசூருவிலும், நாகேஷ் பெங்களூருவிலும் வசித்துள்ளனர். தம்பதி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதேப்போல், நேற்று முன்தினம் இரவு வெளியே வந்தபோது ஜடஹரஹள்ளியில் வைத்து 2 பேருக்கும் இடையே சண்டை உண்டானது. அப்போது கவுரியை கத்தியால் குத்தியும், அவரது தலையில் கல்லைப்போட்டும் நாகேஷ் கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து கெங்கேரி போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகேசை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.