< Back
தேசிய செய்திகள்
மது வாங்க பணம் தர மறுத்த பக்கத்து வீட்டு பெண் கொலை... குற்றவாளி கைது

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

மது வாங்க பணம் தர மறுத்த பக்கத்து வீட்டு பெண் கொலை... குற்றவாளி கைது

தினத்தந்தி
|
15 Dec 2022 8:42 AM IST

மதுபானம் வாங்க பணம் தர மறுத்ததால், 44 வயது பெண் ஒருவரை அவரது பக்கத்து வீட்டுக்காரர் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

தானே,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள டோம்பிவிலி பகுதியில், மதுபானம் வாங்க பணம் தர மறுத்ததால், 44 வயது பெண் ஒருவரை அவரது பக்கத்து வீட்டுக்காரர் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர், தனது பக்கத்து வீட்டை சேர்ந்த மஸ்தூத் அல்லது அவரது மகனிடம் அடிக்கடி மதுகுடிப்பதற்காக பணம் கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

நேற்று காலை, அவர் மீண்டும் ஒருமுறை அவரது வீட்டிற்கு சென்று பணம் கேட்டுள்ளார். அப்போது அப்பெண் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர், கத்தியை எடுத்து மஸ்தூத்தை பலமுறை கத்தியால் குத்தியுள்ளார். இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குற்றவாளியை கைதுசெய்த மண்பாடா காவல் நிலைய போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்