< Back
தேசிய செய்திகள்
மும்பையில் சிறுத்தை தாக்கி பெண் காயம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

மும்பையில் சிறுத்தை தாக்கி பெண் காயம்

தினத்தந்தி
|
12 Nov 2022 5:53 PM IST

மும்பை கோரேகானின் புறநகர் பகுதியில் உள்ள ஆரே காலனியில் சிறுத்தை தாக்கியதில் 34 வயது பெண் ஒருவர் காயமடைந்தார்.

மும்பை,

மும்பை கோரேகானின் புறநகர் பகுதியில் உள்ள ஆரே காலனியில் சிறுத்தை தாக்கியதில் 34 வயது பெண் ஒருவர் காயமடைந்தார்.

நேற்று மாலை ஆரே காலனியில் வசிக்கும் சங்கீதா குரவ் என்ற பெண் தனது பணியிடத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அந்த பகுதியில் சிறுத்தை ஒன்று இருந்ததைப் பார்த்துள்ளார். சிறுத்தையைக் கண்டு பயந்த சங்கீதா தன்னைக் காப்பாற்ற ஓடிய போது தடுக்கி விழுந்தார்.

அவர் மீது பாய்ந்து தாக்கிய சிறுத்தை காட்டுக்குள் ஓடி மறைந்தது. சிறுத்தை தாக்கியதில் சங்கீதாவின் கழுத்து மற்றும் முதுகில் காயங்கள் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அப்பகுதி மக்கள் உதவியுடன் சங்கீதாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது சங்கீதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்