< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நர்சிங் மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை
|30 April 2024 8:50 PM IST
மாணவி உயிரிழந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டெல்லி,
பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், அந்த மாணவி திடீரென விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவி தூக்கில் தொங்குவதை கண்டு விடுதி ஊழியர் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாணவியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அறையில் இருந்து தற்கொலை குறிப்பு ஒன்றை கைப்பற்றிய போலீசார், மாணவி உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.