வேலைக்காக நேர்க்காணலுக்கு சென்ற இளம்பெண்... போதைபொருள் கலந்த பானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை..!
|பொறியியல் பட்டதாரியான இளம்பெண்ணிற்கு போதை பொருள் கலந்த பானத்தை கொடுத்து காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
அரியானா,
அரியானா மாநிலம் டிஎல்எப் பகுதியில் வசிக்கும் பொறியல் பட்டதாரியான இளம்பெண் ஒருவர் நேர்க்காணலுக்கு சென்ற இடத்தில் போதை பொருள் கலந்த பானத்தை கொடுத்து காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் கூறியதாவது; நான் ஆன்லைனில் வேலை தேடி வந்தேன். அப்போது வேலை தொடர்பாக துஷார் சர்மா என்பவரின் தொலைபேசி எண்னை பெற்றேன்.
அவரிடம் வேலை தொடர்பாக பேசியபோது, அவர் சஹாரா வணிக வளாகத்திற்கு நேர்காணலுக்கு வருமாறு கூறினார். இதனை நம்பிய நான், நேர்காணலுக்கான ஆவணங்களுடன் சனிக்கிழமை மதியம் 1 மணியளவில் வணிக வளாகத்திற்கு வந்தேன்.
துஷார் சர்மாவை வணிக வளாகத்தின் முன்பகுதியில் சந்தித்தேன். அவர் என்னை அங்கிருந்த கார் பார்க்கிங் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு பானம் ஒன்றை எனக்கு வழங்கினார்.
அவரை நம்பி அதனை வாங்கி அருந்தினேன். சிறிது நேரத்தில் நான் சுயநினைவை இழந்தபோது, அவர் என்னை காருக்குள் தள்ளி பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் என்னை பார்க்கிங்கில் தனியாக விட்டுவிட்டு அவர் தனது காரில் தப்பிச் சென்றார்.
மேலும், நடந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார். என அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அப்பகுதியில் அமைந்துள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.