ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணமாக்கி அழைத்துச் சென்ற விவகாரம்- கணவன் உள்ளிட்ட 7 பேர் கைது
|அந்த பெண் வேறொரு ஆணுடன் தங்கியிருந்ததால் அவளுடைய மாமியார் ஆத்திரமடைந்து கடத்தி சென்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் பழங்குடியின பெண்ணை நிர்வாண கோலத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் தொடர்பு என கூறி கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் செய்த இந்த செயல் அனைவரையும் வெட்கி தலைகுனிய வைத்தது.
நிர்வாண கோலத்தில் ஊர்வலம் அழைத்து சென்ற போது யாரா ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட அது வைரலானது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி அந்த பெண்ணின் கணவர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளனர். 4 பேரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த பெண் மற்றொரு நபருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது என தலியாவாத் காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
அந்த பெண் வேறொரு ஆணுடன் தங்கியிருந்ததால் அவளுடைய மாமியார் ஆத்திரமடைந்தார் என்றும், பின்னர் அவரை கடத்தி தங்கள் கிராமத்திற்கு அழைத்து சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.