< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
எச்.டி.கோட்டை அருகே பாம்பு கடித்து பெண் சாவு
|3 Sept 2023 12:15 AM IST
எச்.டி.கோட்டை அருகே பாம்பு கடித்து பெண் பறிதாபமாக உயிரிழந்தார்.
எச்.டி.கோட்டை
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா கெண்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேகவுடா. இவரது மனைவி பாக்யா(வயது 28). இவர்களுக்கு சொந்தமாக அந்தப்பகுதியில் விளைநிலம் உள்ளது. அங்கு இஞ்சி பயிரிட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாக்யா நேற்று முன்தினம் தனது தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு சமையல் செய்து எடுத்து கொண்டு சென்றார். அப்போது அந்த பகுதியில் இருந்த நாகப்பாம்பு பாக்யாவை கடித்துள்ளது.
இதனால் பாக்யா கத்தி கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு பேகூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பாக்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அந்தரசந்தே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.