< Back
தேசிய செய்திகள்
ஹலகூர் அருகே விபத்து சரக்கு வேன் கவிழ்ந்து பெண் பலி
தேசிய செய்திகள்

ஹலகூர் அருகே விபத்து சரக்கு வேன் கவிழ்ந்து பெண் பலி

தினத்தந்தி
|
24 Sept 2023 2:26 AM IST

ஹலகூர் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து பெண் பலியானார். 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஹலகூர்:-

கூலி வேலை

மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் அருகே உள்ள புட்டேகவுடனதொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மா(வயது 40). இவருக்கு திருமணமாகி கணவர், மற்றும் குழந்தைகள் உள்ளனர். பத்மா கூலி வேலை செய்து வந்தார். நேற்று காலையில் பத்மா, அதே கிராமத்தைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து கூலி வேலைக்கு புறப்பட்டார். அவர்கள் ஒரு சரக்கு வேனில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் சென்ற சரக்கு வேன் அந்தரவள்ளி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 13 பேர் காயம் அடைந்தனர்.

13 பேர் படுகாயம்

சரக்கு வேனுக்கு அடியில் சிக்கிக்கொண்ட பத்மா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த 13 பேரும் மண்டியா மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணய்யா விரைந்து வந்து பார்வையிட்டார்.

பின்னர் இதுபற்றி அவர் விசாரணை நடத்தினார். விசாரணையில் சரக்கு வேன் டிரைவர் வேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்றதே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்தது. தொடர்ந்து இதுபற்றி ஹலகூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்