< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கேரளாவில் பொதுச்சுவர் தகராறில் தாய் மகள் மீது ஆசிட் வீச்சு..!
|20 July 2022 3:49 PM IST
கேரளாவில் பொதுச்சுவர் தகராறில் தாய், மகள் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பொதுச்சுவர் தகராறில் தாய், மகள் மீது பக்கத்து வீட்டுக்காரர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட பெண் மீது ஐபிசி சட்டப்பிரிவு 307 (கொலை முயற்சி), பிரிவு 326 (அபாயகரமான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.