கபிலா ஆற்றில் குதித்து பெண் தற்கொலை
|குழந்தை இல்லாத ஏக்கத்தில் கபிலா ஆற்றில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
மைசூரு;
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா மாதாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சுவாமி. இவரது மனைவி லட்சுமி (வயது 26). இந்த தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் சுவாமியும், லட்சுமியும் வேதனையில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் குழந்தை பிறக்காத ஏக்கத்தில் இருந்த லட்சுமி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் பீச்சனஹள்ளி கிராமத்தில் உள்ள கபினி அணைக்கு சென்ற அவர், அங்கு ஓடும் கபிலா ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றி அறிந்ததும் எச்.டி.கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். தீயணைப்பு படையினர் கபிலா ஆற்றில் லட்சுமியின் உடலை தேடி வருகிறார்கள். இன்னும் அவரது உடல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தை இல்லாத ஏக்கத்தில் லட்சுமி, கபிலா ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து எச்.டி.கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.