< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மது அருந்திவிட்டு வந்து தாக்கியதால் ஆத்திரம்: கிரிக்கெட் மட்டையால் கணவனை அடித்துக் கொன்ற மனைவி
|20 Aug 2023 9:54 PM IST
ராஜஸ்தானில் மது அருந்திவிட்டு வந்து போதையில் தாக்கிய கணவனை, கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில், மது அருந்திவிட்டு வந்து போதையில் தாக்கிய கணவனை, கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
பால்மிகி காலனி பகுதியைச் சேர்ந்தவர் தினக்கூலி தொழிலாளியான பண்டி பால்மிகி (வயது 40). நேற்று இரவு மது அருந்திவிட்டு குடிபோதையில் வீடு திரும்பிய பால்மிகி, அவரது மனைவி கவிதா தேவியை (வயது 35) அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி, பழிவாங்கும் விதமாக கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் கவிதா தேவியை போலீசார் கைது செய்தனர்.