< Back
தேசிய செய்திகள்
உ.பி: பெண் வங்கி மேலாளரின் முகத்தில் ஆசிட் வீச்சு... போலீசார் விசாரணை

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

உ.பி: பெண் வங்கி மேலாளரின் முகத்தில் ஆசிட் வீச்சு... போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
9 Aug 2022 2:27 AM IST

உத்தரபிரதேசத்தில் பெண் வங்கி மேலாளரின் முகத்தில் ஆசிட் வீசிய இரு இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் வசிக்கும் திக்ஷா சோங்கர் (34) என்பவர் கௌசாம்பி மாவட்டத்தின் சைல் தெஹ்சில் சையத் சரவா கிராமத்தில் உள்ள பாங்க் ஆப் பரோடா கிளையில் மூத்த மேலாளராக பணிபுரிகிறார்.

இந்த நிலையில், அவர் நேற்று இரவு 11.30 மணியளவில், சில்லா ஷாபாஜி கிராமம் அருகே ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தபோது இரண்டு இளைஞர்கள் ஸ்கூட்டரை நிறுத்தி, அவரது முகத்தில் ஆசிட் வீசிவிட்டு தப்பியோடினர்.

இதனால், முகத்தில் தீக்காயங்களுடன் அப்பெண் சிகிச்சைக்காக பிரயாக்ராஜில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இதுகுறித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்