< Back
தேசிய செய்திகள்
விவசாயியை, கள்ளக்காதலனுடன் சோ்ந்து தீர்த்து கட்டிய மனைவி
தேசிய செய்திகள்

விவசாயியை, கள்ளக்காதலனுடன் சோ்ந்து தீர்த்து கட்டிய மனைவி

தினத்தந்தி
|
15 Aug 2023 12:15 AM IST

உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால் விவசாயியை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய மனைவியை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விவசாயியை கொன்று உடலை குளத்தில் வீசியது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.

சிக்கமகளூரு:

உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால் விவசாயியை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய மனைவியை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விவசாயியை கொன்று உடலை குளத்தில் வீசியது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.

விவசாயி

சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகா எகட்டி அருகே உள்ள அனுமனஹள்ளி கிராமத்தில் கடந்த 6-ந் தேதி குளத்தில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாக எகட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற ேபாலீசார் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த நவீன்(வயது 28) என்பதும், விவசாயி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நவீனின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நவீன் மனைவி பாவனா மீது சந்தேகம் உள்ளதாக கூறினர்.

கள்ளக்காதல்

இதுதொடர்பாக பாவனாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

அதாவது பாவனாவுக்கு அதேப்பகுதியை சேர்ந்த சஞ்சய்(30) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து நவீனுக்கு தெரியவந்தது. இதனால் நவீன் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாவனா, நவீனை கொலை செய்ய வேண்டும் என்று கள்ளக்காதலன் சஞ்சயிடம் கூறியுள்ளார். இதற்கு சஞ்சையும் ஒப்புக்கொண்டார்.

குளத்தில் வீசினர்

சம்பவத்தன்று நவீனுக்கு, பாவனா சாப்பாட்டில் அதிகளவு தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். இதனால் நவீன் மயங்கியுள்ளார். அந்த சமயத்தில் நவீனை 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தூக்கிச் சென்றுள்ளனர். அப்போது மயங்கிய நிலையில் இருந்த நவீனை அங்குள்ள குளத்தில் வீசி கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் பாவனா மற்றும் சஞ்சயை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை, மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்