< Back
தேசிய செய்திகள்
சொத்து தகராறில் மாமியாரை கொன்ற மருமகள் கைது
தேசிய செய்திகள்

சொத்து தகராறில் மாமியாரை கொன்ற மருமகள் கைது

தினத்தந்தி
|
15 Oct 2022 4:22 AM IST

பெங்களூருவில் சொத்து தகராறில் மாமியாரை கொன்ற மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூரு ஸ்ரீராமபுரா பகுதியில் வசித்து வந்தவர் ராணி (வயது 76). இவரது மருமகள் சுகுணா. இந்த நிலையில் ராணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து ஸ்ரீராமபுரா போலீசார் அப்போது சுகுணா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சுகுணாவின் கணவருக்கு குடும்ப சொத்தை பிரித்து கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சுகுணா தனது மாமியாரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சுகுணா, தனது அத்தையை கடுமையாக தாக்கி உள்ளார். இதில் கழுத்தில் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து சுகுணாவை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்