< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ராஜஸ்தானில் கிணற்றில் விழுந்து தாய், 3 குழந்தைகள் உயிரிழப்பு
|19 April 2023 9:47 AM IST
ராஜஸ்தானில் கிணற்றில் விழுந்து தாய், 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் நவாலி (வயது 30). இவருக்கு திருமணமாகி 12 வயதில் ஒரு மகளும், 8 மற்றும் 10 வயதில் 2 மகன்களும் இருந்தனர்.
இந்த நிலையில் நவாலியின் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றுக்குள் அவரும், அவரின் 3 குழந்தைகளும் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் 4 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 4 பேரும் கிணற்றில் தவறி விழுந்துதான் இறந்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.