< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மணிப்பூரிலும் நிலச்சரிவு... தாய், மகன் பலி
|31 July 2024 5:22 AM IST
நிலச்சரிவில் போலீஸ்காரர் ஒருவரின் வீடு அடித்துச்செல்லப்பட்டது.
இம்பால்,
கேரளாவில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தலைநகர் இம்பாலில் இருந்து 145 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டிம்தான்லாங் கிராமத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் போலீஸ்காரர் ஒருவரின் வீடு அடித்துச்செல்லப்பட்டது. இந்த நிலச்சரிவில் போலீஸ்காரர் ரிங்சின்லுங் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், அவரது மனைவி மற்றும் 2 வயது மகன் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.