< Back
தேசிய செய்திகள்
ஆசிரியர்கள் வழிகாட்டுதல் இன்றி குடிமக்கள், சமூக வளர்ச்சி சாத்தியமில்லை; இமாசல பிரதேச முதல்-மந்திரி பேச்சு
தேசிய செய்திகள்

ஆசிரியர்கள் வழிகாட்டுதல் இன்றி குடிமக்கள், சமூக வளர்ச்சி சாத்தியமில்லை; இமாசல பிரதேச முதல்-மந்திரி பேச்சு

தினத்தந்தி
|
6 Oct 2022 5:06 PM GMT

ஆசிரியர்களின் தேவையை முந்தின மாநில அரசுகள் முழு அளவில் புறக்கணித்தன என இமாசல பிரதேச முதல்-மந்திரி கூறியுள்ளார்.



சிம்லா,


இமாசல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் சிம்லா நகரில் இன்று மாலை ஓட்டல் ஒன்றில் நடந்த ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பிலான பாராட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

இதன்பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, மாணவர்களுக்கு தரமுள்ள கல்வியை வழங்குவதற்கான ஈடுபாட்டுடன் மாநில அரசு பணியாற்றி வருகிறது.

அதற்கு மாநிலத்தில் உள்ள ஆசிரியர்கள் பாராட்டத்தக்க வகையில் பங்காற்றி வருகின்றனர். தேச கட்டமைப்பில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

அவர்களது வழிகாட்டுதல் இன்றி குடிமக்கள் மற்றும் சமூக வளர்ச்சி சாத்தியமில்லை என கூறியுள்ளார். முந்தின மாநில அரசுகள் ஆசிரியர்களின் தேவையை முழு அளவில் புறக்கணித்தன. ஆனால், தற்போதுள்ள அரசு ஆசிரியர்களின் வலியை புரிந்து, அவர்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய முயற்சித்துள்ளது என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்