வரதசட்சணையாக கொடுத்த கார்: ஓட்ட தெரியாத புது மாப்பிள்ளை: கார் மோதியதில் அத்தை உயிரிழப்பு ...!
|உத்தரப்பிரதேசத்தில், மணப்பெண் வீட்டார் பரிசளித்த காரை, ஓட்டிப்பார்த்த மணமகன், உறவினர்கள் மீது கார் மோதியதில் அத்தை பலியானார். நான்கு பேர் காயமடைந்தனர்.
கான்பூர்,
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அக்பர்பூர் கிராமத்தில், மணப்பெண் வீட்டார் பரிசளித்த காரை, ஓட்டிப்பார்த்த மணமகன், உறவினர்கள் மீது காரை மோதியதில் மணமகனின் அத்தை பலியானார். நான்கு பேர் காயமடைந்தனர். திருமணத்துக்கு முன்பு நடைபெறும் திலகமிடும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாப்பிள்ளைக்கு காரை பரிசளித்தார் மாமனார். தனக்கு கார் ஓட்டத் தெரியாது என்பதை மறைத்து, மாமனார் அன்பாக கொடுத்த காரை ஓட்டிப் பார்க்கும் ஆசையில் வேகமாக புறப்பட்ட மாப்பிள்ளை, பிரேக் பிடித்து வண்டியை திருப்புவதற்கு பதிலாக ஏக்ஸிலேட்டரை அழுத்தி உள்ளார்.
கார் பாய்ந்து மணமக்களை வாழ்த்த திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில், மணமகனின் அத்தை மீது கார் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். 10 வயது சிறுமி உள்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்த போலீசார் மணமகனை கைது செய்தனர். திருமண வீட்டில் வரதட்சணையாக வழங்கப்பட்ட கார் விபத்திற்குள்ளாகி ஒரு உயிரை பறித்தது இரு வீட்டாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.