< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து
|11 March 2024 9:50 PM IST
புனித ரமலான் மாதம் தொடங்கியதை அடுத்து இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதிநாளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியதாக தலைமை காஜி அறிவித்தார்.
இந்நிலையில், புனித ரமலான் மாதம் தொடங்கியதை அடுத்து இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அனைவருக்கும் ஆசிர்வதிக்கப்பட்ட ரம்ஜான் வாழ்த்துக்கள். இந்த புனித மாதம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பை கொண்டு வரட்டும் என பதிவிட்டுள்ளார்.