< Back
தேசிய செய்திகள்
நடுங்க வைக்கும் குளிர்: டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு
தேசிய செய்திகள்

நடுங்க வைக்கும் குளிர்: டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு

தினத்தந்தி
|
7 Jan 2024 12:28 AM IST

தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது.

புதுடெல்லி,

வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. அதிகாலை மற்றும் இரவு வேளையில் குளிரின் அளவு அதிகரித்து மக்களை பாடாய் படுத்துகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகிறது.

இதற்கிடையில், டெல்லியில் குளிர்கால விடுமுறை முடிந்து, வருகிற திங்கட்கிழமை பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை வருகிற 10-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடுமையான குளிர் காலநிலை காரணமாக, டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வருகிற 10-ம் தேதி வரை குளிர்கால விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லியில் அடுத்த சில நாட்களுக்கு கடுமையான குளிர், அடர்த்தியான மூடுபனியுடன் லேசான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்