< Back
தேசிய செய்திகள்
டிசம்பர் 7 முதல் 29 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; மத்திய அரசு அறிவிப்பு
தேசிய செய்திகள்

டிசம்பர் 7 முதல் 29 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; மத்திய அரசு அறிவிப்பு

தினத்தந்தி
|
19 Nov 2022 7:44 AM IST

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடப்பு ஆண்டில் வருகிற டிசம்பர் 7-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கும் என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்து உள்ளார்.



புதுடெல்லி,


இந்திய நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், நடப்பு ஆண்டில் வருகிற டிசம்பர் 7-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடைபெறும்.

வரவிருக்கிற குளிர்கால கூட்டத்தொடரில் மொத்தம் 17 பணி நாட்கள் இருக்கும் என தெரிவித்து உள்ளார். அமுத கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விவாதங்கள் இருக்கும் என்றும், ஆக்கப்பூர்வ விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த கூட்டத்தொடரின் முதல் நாள், உறுப்பினர்களின் மறைவையொட்டி ஒத்தி வைக்கப்படும் என பார்க்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை குறைந்த சூழலில், நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முழு அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்ட நிலையில், பெரிய அளவில் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்