< Back
தேசிய செய்திகள்
வரும் 2024 மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகளுடன் நிற்போம் - தேவகவுடா அறிவிப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகளுடன் நிற்போம் - தேவகவுடா அறிவிப்பு

தினத்தந்தி
|
16 April 2023 12:18 AM IST

வரும் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகளுடன் நிற்போம் என தேவகவுடா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கர்நாடகா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் தனது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன்படி, ஹாசன் தொகுதியில் தேவகவுடாவின் மருமகள் பவானி ரேவண்ணாவுக்கு பதிலாக ஹெச்பி ஸ்வரூப் நிறுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் பக்கம் நிற்கப்போவதாக முன்னாள் பிரதமரும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

இதனிடையே பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்தும்படி பிதரமருக்கு தான் கடிதம் எழுதியுள்ளதாக தேவகவுடா சனிக்கிழமை தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், "சமீபத்தில் பிரதமர் மோடிக்கு நான் எழுதிய கடிதத்தில், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் அறிமுகம் செய்யவதை பரிசீலிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளேன். விரைவில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு நாம் போகும்போது அதுவே முதல் சிறந்த விஷயமாக இருக்கவேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்