< Back
தேசிய செய்திகள்
கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி நாளை ராஜினாமா: அரசியலில் சேருகிறார்?
தேசிய செய்திகள்

கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி நாளை ராஜினாமா: அரசியலில் சேருகிறார்?

தினத்தந்தி
|
4 March 2024 6:55 AM IST

நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா கல்வி தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு அளித்தவர்.

கொல்கத்தா,

கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா நாளை (செவ்வாய்க்கிழமை) ராஜினாமா செய்கிறார். கொல்கத்தாவில் தனது வீட்டு முன்பு அவரே நிருபர்களிடம் இத்தகவலை தெரிவித்தார்.

ஜனாதிபதியிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க போவதாகவும், அதன் நகல்கள் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார். ''அரசியலில் ஈடுபட போகிறீர்களா?'' என்று கேட்டதற்கு ''ராஜினாமா கடிதம் அளித்த பிறகு எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பேன்'' என்று அவர் கூறினார்.

நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா, கல்வி தொடர்பான வழக்குகளில் அளித்த தீர்ப்புகள் அரசியல் அரங்கில் விவாதத்தை உருவாக்கின. ஆசிரியர் தேர்வு முறைகேடு தொடர்பாக அவர் சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்