< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சனாதன தர்மத்தை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது: மத்தியபிரதேச முதல்-மந்திரி ஆவேசம்
|11 Sept 2023 3:12 AM IST
சனாதன தர்மத்தை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
போபால்,
மத்தியபிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் சனாதன தர்மம் தொடர்பான சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசினார். இது குறித்து அவர் பேசுகையில், "சனாதன தர்மம் அனைவரின் நலனையும் விரும்புகிறது.
ஆனால் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சனாதன தர்மத்தை மோசமான நோய்களுடன் ஒப்பிடுகின்றனர். சனாதன தர்மத்தை அவமதிப்பதை யாராவது பொறுத்துக்கொள்வார்களா? அரசியலில் மதத்தை இழிவுபடுத்தும் காங்கிரசின் சதி எந்த வகையிலும் தொடர அனுமதிக்க முடியாது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உலகம் முழுவதும் சனாதன மரபுகளை பின்பற்றி வருகிறது. நாங்கள் அனைத்து மதங்களையும் மதிக்கிறோம். ஆனால் சனாதன தர்மத்தை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது" என கூறினார்.