< Back
தேசிய செய்திகள்
வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தை உடைக்க முயன்ற விவகாரத்தில் எம்.பி.பட்டீலிடம் இருந்து கட்சி பதவி பறிக்கப்படுமா? ; பா.ஜனதா கேள்வி
தேசிய செய்திகள்

வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தை உடைக்க முயன்ற விவகாரத்தில் எம்.பி.பட்டீலிடம் இருந்து கட்சி பதவி பறிக்கப்படுமா? ; பா.ஜனதா கேள்வி

தினத்தந்தி
|
20 Aug 2022 5:15 PM GMT

வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தை உடைக்க முயன்ற விவகாரத்தில் எம்.பி.பட்டீலிடம் இருந்து கட்சி பதவி பறிக்கப்படுமா? என்று சித்தராமையாவுக்கு, பா.ஜனதா கேள்வி எழுப்பி உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக மாநில பா.ஜனதா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வீரசைவ-லிங்காயத் சமுதாயத்துக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி காலங்களில் முதல்-மந்திரிகளாக இருந்த லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த வீரேந்திர பட்டீல், நிஜலிங்கப்பாவை காங்கிரஸ் அவமானப்படுத்தியது. சித்தராமையா தனது ஆட்சி காலத்தில் வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தை உடைக்க என்னென்ன செய்ய வேண்டுமோ, அவை அனைத்தையும் செய்தார்.

தற்போது வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தை உடைக்க தான் முயற்சிக்கவில்லை என்றும், சிலரது தவறான வழிகாட்டுதலால் அதுபோன்ற சம்பவம் நடக்க நேர்ந்ததாக ரம்பாபுரி மடாதிபதியிடம் சித்தராமையா கூறியுள்ளார். எப்போதுமே பசவண்ணர் வகுத்து கொடுத்த பாதையில் செல்வதாக சித்தராமையா கூறி வருகிறார். அப்படியென்றால், வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தை உடைக்க வழிகாட்டியதும், நீங்கள் (சித்தராமையா) பாதை மாறி செல்வதற்கும் காரணமாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார குழு தலைவர் (எம்.பி.பட்டீல்) தான். தற்போதும் அவர் உங்களுடன் தான் இருக்கிறார். வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தை உடைக்க காரணமாக இருந்தவரிடம் இருந்து கட்சி பதவி பறிக்கப்படுமா?.

இவ்வாறு பா.ஜனதா கூறியுள்ளது.

மேலும் செய்திகள்