< Back
தேசிய செய்திகள்
ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் தருகிறேன் - சிவசேனா எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
தேசிய செய்திகள்

ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் தருகிறேன் - சிவசேனா எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

தினத்தந்தி
|
16 Sept 2024 4:07 PM IST

ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்ச ரூபாய் தருகிறேன் என்று சிவசேனா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

மும்பை,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த சில நாட்களுக்குமுன் அமெரிக்கா சென்றார். அங்கு வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியின்போது இந்தியாவில் இடஒதுக்கீடு தொடர்பாக ராகுல்காந்தியிடம் நெறியாளர் கேள்வி எழுப்பினார். அப்போது அந்த கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, இந்தியாவில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும்போது இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து காங்கிரஸ் யோசிக்கும் என்றார்.

அதேவேளை, இந்தியாவில் இடஒதுக்கீட்டு முறையை ஒழிக்க ராகுல்காந்தி நினைப்பதாக சமூகவலைதளங்களில் தவறான கருத்து பரவி வருகிறது.

இந்நிலையில், இடஒதுக்கீட்டை ஒழிப்பேன் என்று கூறிய ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்ச ரூபாய் தருகிறேன் என்று சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்குவாட் (ஏக்நாத் ஷிண்டே தரப்பு) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்குவாட் கூறுகையில், இந்தியாவில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை ஒழிக்க நினைப்பதாக ராகுல்காந்தி வெளிநாட்டில் பேசியுள்ளார். இது காங்கிரசின் உண்மை முகத்தை காட்டுகிறது. இடஒதுக்கீட்டை ஒழிப்பேன் என்று கூறிய ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்ச ரூபாய் தருகிறேன்' என்றார்.

மேலும் செய்திகள்