< Back
தேசிய செய்திகள்
எந்த விலை கொடுத்தாவது அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் - ராகுல்காந்தி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

எந்த விலை கொடுத்தாவது அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் - ராகுல்காந்தி

தினத்தந்தி
|
20 Aug 2024 3:22 PM IST

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதியை நிலை நாட்டுவோம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசு பணியிடங்களில் நேரடி நியமன நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உயர் அதிகாரிகள் நேரடி நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரத்தை ரத்து செய்யும்படி, மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவருக்கு மத்திய மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கடிதம் எழுதி உள்ளார். சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீடு அவசியம் என பிரதமர் கூறியுள்ளதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நேரடி நியமனம் தொடர்பான யு.பி.எஸ்.சி. அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளநிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "என்ன விலை கொடுத்தேனும் இடஒதுக்கீட்டையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாப்போம். உயர் பதவிகளில் நேரடி நியமனம் போன்ற பா.ஜனதாவின் அனைத்து சதிகளையும் முறியடிப்போம்.

மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். 50 சதவீத இடஒதுக்கீடு செய்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதியை நிலை நாட்டுவோம். ஜெய் ஹிந்த்.." என்று அதில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்