< Back
தேசிய செய்திகள்
வீட்டை சூறையாடிய காட்டுயானைகள்; கிராம மக்கள் பீதி
தேசிய செய்திகள்

வீட்டை சூறையாடிய காட்டுயானைகள்; கிராம மக்கள் பீதி

தினத்தந்தி
|
27 July 2022 2:27 PM GMT

குடகு மாவட்டம் சோமவார்பேட்டையில் காட்டுயானைகள் கிராமத்திற்குள் புகுந்து ஒரு வீட்டில் மேற்கூரை மற்றும் பொருட்களை சூறையாடியது. இதனால் கிராம மக்கள் இடையே பீதி ஏற்பட்டுள்ளது.

குடகு;

காட்டுயானை அட்டகாசம்

குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா கனகூரு கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வதி. இவர் வசித்து வரும் கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அவ்வப்போது யானைகள், சிறுத்தைகள் வந்து கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்துவிட்டு சென்றன.

இந்த நிலையில் நேற்று காலை கிராமத்திற்குள் புகுந்த யானை, பார்வதியின் வீட்டில் இருந்த பொருட்களை தும்பிக்கையால் தூக்கி வீசியது. மேலும் வீட்டின் மேற்கூரைகளை பெயர்த்து எறிந்தது. ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைய முயற்சித்தது.

ஆனால் முடியவில்லை. இருப்பினும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் தும்பிக்கையால் தூக்கி வீசி நாசப்படுத்தியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பார்வதி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார்.

நடவடிக்கை எடுக்கவேண்டும்

சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் காட்டுயானைகளை அங்கிருந்து துரத்தியடித்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது, 'காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக பலமுறை புகார் அளிக்கப்பட்டும், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சம்பவத்திற்கு பின்னராவது சரியான நடவடிக்கை எடுங்கள். இல்லையென்றால் நாங்கள் போராட்டம் நடத்துவோம்' என்றனர். இதை ஏற்ற வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

மேலும் செய்திகள்