< Back
தேசிய செய்திகள்
ஹாசனில் காட்டு யானைகளுக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணி தீவிரம்
தேசிய செய்திகள்

ஹாசனில் காட்டு யானைகளுக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
16 May 2023 8:59 PM GMT

ஹாசனில் காட்டுயானைகளுக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஹாசன்:

ஹாசனில் காட்டுயானைகளுக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

காட்டுயானைகள் அட்டகாசம்

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா, ஆலூர், பேளூரு ஆகிய தாலுகாக்களில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 பேர் மீது காட்டுயானைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. மேலும் ஏராளமான விளை பயிர்களையும் மிதித்து நாசப்படுத்திவிட்டு சென்றுள்ளன. கிராமங்களுக்குள் புகுந்து பொதுமக்களின் உடமைகளையும் இந்த காட்டுயானைகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுப்பதுடன், அவை நிரந்தரமாக கிராமத்திற்குள் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற வனத்துறை அதிகாரிகள் அபிமன்யூ, மகேந்திரா, பிரசாந்த், விக்ரம் உள்பட 5 கும்கி யானைகள் உதவியுடன் காட்டுயானைகளுக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரேடியோ காலர்

அதேபோல ஏற்கனவே ரேடியோ காலர் பொருத்தப்பட்ட யானைகளுக்கு அதை கழற்றிவிட்டு, புதிய ரேடியோ காலர் பொருத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக புவனேஸ்வரி, காந்தி உள்பட 3 யானைகளுக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து யானைகளுக்கும் இந்த ரேடியோ காலர் பொருத்தப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த ரேடியோ காலர் மூலம் யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து, பொதுமக்களை உஷார் படுத்த முடியும் என்று கூறியுள்ளனர். மேலும் அந்த காட்டுயானைகளை பிடிப்பதற்கும், இந்த ரேடியோ காலர் உதவியாக இருக்கும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்