< Back
தேசிய செய்திகள்
கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டு யானை.. மீட்புப்பணிகள் தீவிரம்
தேசிய செய்திகள்

கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டு யானை.. மீட்புப்பணிகள் தீவிரம்

தினத்தந்தி
|
12 April 2024 1:30 PM IST

யானையை மீட்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கொச்சி,

கேரளாவில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு யானைகள், வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பெருமளவில் சேதங்களை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் மனிதர்களும் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு பலியாகின்றனர்.

இந்த நிலையில், எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலம் வனப்பகுதி அருகேயுள்ள தனியார் ரப்பர் தோட்டத்திற்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அப்போது அங்கிருந்த கிணற்றுக்குள் யானை தவறி விழுந்தது. இது தொடர்பான தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானையை எப்படி மீட்பது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் பக்கவாட்டு சுவர் இல்லாததால் யானை தவறி விழுந்துள்ளது என்றும், யானையை மீட்டு வனப்பகுதிக்குள் விடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்