< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கேரளாவில் ஆட்டோவை அடித்து நொறுக்கிய காட்டு யானை - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
|7 March 2024 9:50 PM IST
ஆட்டோவில் இருந்த பயணிகள் யானை வருவதை முன்பே கவனித்து ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடினர்.
திருவனந்தபுரம்,
கேரளா மாநிலம் மூணாறில் 'படையப்பா' என்று அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவை அடித்து நொறுக்கி துவம்சம் செய்துள்ளது. இந்த சம்பவத்தின்போது ஆட்டோவில் இருந்த பயணிகள் யானை வருவதை முன்பே கவனித்து ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடினர்.
இதனால் அதிர்ஷ்டவசமாக ஆட்டோவில் இருந்த பயணிகள் அனைவரும் யானையின் தாக்குதலில் இருந்து தப்பினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், கடலார் எஸ்டேட் பகுதியில் போக்குவரத்திற்கு தடை விதித்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.