< Back
தேசிய செய்திகள்
மனைவியின் மருத்துவ செலவு: ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்ற தந்தை...!
தேசிய செய்திகள்

மனைவியின் மருத்துவ செலவு: ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்ற தந்தை...!

தினத்தந்தி
|
21 Sept 2022 9:50 PM IST

மனைவியின் மருத்துவ செலவிற்காக ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு தந்தை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே பணத்திற்காக பெற்ற பிள்ளையை தந்தை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலிபுரா கிராமத்தில் வசித்து வரும் பசப்பா. இவர் பிறந்து 25 நாட்களேயான தனது குழந்தையை ரூ. 50 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த அதே கிராமத்தை சேர்ந்த திருநங்கை குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். கலிபுரா கிராமத்திற்கு வந்த அலுவலர்கள், பசப்பா- நாகவேணி தம்பதியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மனைவியின் மருத்துவ செலவுக்காக, வெறும் காகிதத்தில் கையெழுத்திட்டு ரூ. 50 ஆயிரத்திற்கு ஆண் குழந்தையை விற்றதாக பசப்பா தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குழந்தையை பெற்று சென்றவர்களை தேடி வருகின்றனர். மனைவியின் மருத்துவ செலவுக்காக பெற்ற பிள்ளையை தந்தை விற்பனை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்