< Back
தேசிய செய்திகள்
துப்பாக்கியால் சுட்டு பெண் கொலை; கணவர் தலைமறைவு
தேசிய செய்திகள்

துப்பாக்கியால் சுட்டு பெண் கொலை; கணவர் தலைமறைவு

தினத்தந்தி
|
15 Sept 2023 3:02 AM IST

துப்பாக்கியால் சுட்டு பெண் கொலை செய்யப்பட்டார். அவரது கணவர் தலைமறைவாகி விட்டார்.

கலபுரகி:


கலபுரகி மாவட்டம் சித்தாப்புரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஆலூரு கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ். இவரது மனைவி அனுமவ்வா(வயது 37). இந்த தம்பதிக்கு 18 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த பல மாதங்களாக பசவராஜுடன் சேர்ந்த வாழ பிடிக்காமல் தன்னுடைய பெற்றோர் வீட்டிலேயே அனுமவ்வா வசித்து வந்தார்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அனுமவ்வா, கணவர் பசவராஜுடன் சேர்ந்தார். இந்த நிலையில், நேற்று குடிபோதையில் பசவராஜ் தனது மனைவியுடன் மீண்டும் சண்டை போட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து அனுமவ்வாவை நோக்கி 2 முறை பசவராஜ் சுட்டுள்ளார். இதில், குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அனுமவ்வா இறந்து விட்டார். இதுகுறித்து சித்தாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட பசவராஜை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்