'மனைவி கோபமாக இருக்கிறார்': புதிதாக திருமணமான கான்ஸ்டபிளின் விடுப்பு விண்ணப்பம் - இணையத்தில் வைரல்
|'மனைவி கோபமாக இருக்கிறார்' என்று உத்தரபிரதேச கான்ஸ்டபிள் எழுதிய விடுப்பு விண்ணப்பம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மஹராஜ்கஞ்ச்,
'மனைவி கோபமாக இருக்கிறார்' என்று உத்தரபிரதேச கான்ஸ்டபிள் எழுதிய விடுப்பு விண்ணப்பம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நவ்தன்வா காவல் நிலையத்தில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கடந்த மாதம் திருமணம் நடந்துள்ளது. அவர் மௌ மாவட்டத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் எழுதிய விடுப்பு விண்ணப்பத்தில், தனக்கு விடுமுறை கிடைக்காததால் கோபமான மனைவி, போன் செய்யும் போது தன்னுடன் பேசுவதில்லை என்றும் பலமுறை அவருக்கு போன் செய்ததாகவும் ஆனால் அவர், தனது தாயிடம் போனை கொடுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனது மருமகனின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வருவேன் என்று தனது மனைவிக்கு உறுதியளித்ததாகவும் விடுமுறை கிடைக்கவில்லையென்றால் வீட்டிற்கு செல்ல முடியாது என்றும் குறிப்பிட்டு விடுப்பு கேட்டுள்ளார். இந்த விண்ணப்பத்தைப் படித்த உதவி கண்காணிப்பாளர் ஜனவரி 10 முதல் 5 நாட்களுக்கு அவருக்கு சாதாரண விடுப்பு வழங்கி உள்ளார்.
மேலும், கடமையில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு அவர்களின் தேவைக்கேற்ப விடுப்பு எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் விடுப்பு காரணமாக எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.