ஓட்டலில் 2 பேருடன் மனைவி உல்லாசம்; நள்ளிரவில் உள்ளே புகுந்த டாக்டர் கணவர்: வைரலான வீடியோ
|டாக்டர் மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு ஓட்டல் அறைக்குள் திடீரென புகுந்த கணவர், மனைவியுடன் தகாத நிலையில் இருந்த இரண்டு பேரை உறவினர்களுடன் சேர்ந்து கடுமையாக தாக்கினார்.
காஸ்கஞ்ச்,
உத்தர பிரதேசத்தில் டாக்டர் ஒருவர் வசித்து வருகிறார். அவருடைய மனைவி ஓராண்டாக இவரை பிரிந்து, தனியாக வாழ்ந்து வருகிறார். இவருடைய மனைவியும் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், மனைவிக்கு வேறு நபர்களுடன் தொடர்பு உள்ளது என்ற சந்தேகம் கணவரான டாக்டருக்கு வந்துள்ளது. இதுபற்றிய ரகசிய தகவல் கிடைத்து கணவர் நேற்று முன்தினம் இரவு மனைவியை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
இதில், காஸ்கஞ்ச் நகரில் உள்ள ஆடம்பர ஓட்டல் ஒன்றிற்குள் டாக்டரான மனைவி நுழைந்துள்ளார். இரவு நேரத்தில் தனியாக ஓட்டலுக்கு சென்ற அவரை கணவர் கண்காணித்து இருக்கிறார்.
இதன்பின், இரவு நேரம் சென்றதும் நள்ளிரவில் மனைவி தங்கியிருந்த ஓட்டல் அறைக்குள் உறவினர்களுடன் நுழைந்திருக்கிறார். அப்போது, அந்த அறையில் அவருடைய மனைவியுடன் வேறு 2 பேர் தகாத உறவில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
இதனை கண்டதும் கணவர் ஆத்திரமடைந்து உள்ளார். அவரும், அவருடன் வந்திருந்த உறவினர்களான 2 ஆண்களும் சேர்ந்து, மனைவி மற்றும் அவருடன் இருந்த 2 பேருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கைகலப்பும் ஏற்பட்டது. இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அது சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வைரலானது.
இந்த வீடியோவானது, ஆண்களுக்கான விவகாரத்திற்கான இந்திய கவுன்சில் சார்பிலான எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
டாக்டர் மனைவியுடன் இருந்தவர்கள் அவருடைய காதலர்கள் என கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் காசியாபாத் நகரை சேர்ந்தவர். மற்றொருவர் புலந்த்சாகர் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் படை ஒன்று அந்த பகுதிக்கு வந்தனர். அவர்கள் டாக்டர் கணவர், அவருடைய 2 உறவினர்கள் மற்றும் மனைவியின் 2 காதலர்களை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மனைவியை போலீசார் கைது செய்யவில்லை.
நடந்த சம்பவம் பற்றி கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். மனைவி மற்றும் அந்த 2 பேருக்கு எதிராக தவறாக நடந்து கொண்டனர் என புகாரில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், கணவருக்கு எதிராக மனைவி புகார் எதுவும் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கான காரணம் மற்றும் பின்னணி ஆகியவை பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.