லிப்-லாக் முத்தம் கொடுத்த கணவன் நாக்கை கடித்து துண்டாக்கிய மனைவி
|முத்தம் கொடுக்க முயன்ற கணவனின் உதட்டை கடித்து துண்டாக்கினார் மனைவி
திருமலை:
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் எல்லம்ம குட்டாதாண்டா கிராமத்தை சேர்ந்தவர் தாராசந்த் நாயக். இவரது மனைவி புஷ்பாவதி. இவர்கள் 2015-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அவர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இவர்களுக்கு இடையே தகராறு நீடித்து வந்தது. இவர்களது சண்டை கிராமத்திலும் பிரபலமாக இருந்தது. வழக்கம்போல் நேற்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
சிறிது நேரம் கழித்து தாராசந்த் நாயக் அவரது மனைவியை சமாதானம் செய்ய முடிவு செய்தார். குடும்பத் தகராறு குறித்து மனைவியிடம் அமைதியாக பேசினார்.
அப்போது மவுனமாக இருந்த மனைவி புஷ்பாவதி அருகில் சென்று உதட்டோடு முத்தம் கொடுக்க முயன்றார். இதனை அவர் தடுத்தார். ஆனாலும் தாராசந்த் நாயக் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்றதால், தாராசந்த் நாயக்கின் நாக்கை புஷ்பாவதி கடித்தார்.
இதில் வலி தாங்காமல் தாராசந்த் நாயக் அலறினார். ஆனாலும் புஷ்பாவதி விடாமல் நாக்கை கடுத்தார். இதில் நாக்கு துண்டாகி தொங்கியது.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பலத்த காயமடைந்த தாராசந்த் நாயக், வாயில் ரத்தம் சொட்ட சொட்ட வலியால் கதறியபடி இருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக குத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக அனந்தபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் தன் விருப்பத்திற்கு மாறாக தன்னை தாக்கி முத்தமிட வற்புறுத்தியதால் கணவன் நாக்கை கடித்ததாக கூறி மனைவி புஷ்பாவதி போலீசில் புகார் அளித்தார். மேலும் தாராசந்த் நாயக்கும் மனைவி மீது போலீசில் புகார் அளித்தார்.
அதில் தனது நாக்கை வேண்டு என்றே மனைவி கடித்தார். என் மனைவி கொன்று விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.