< Back
தேசிய செய்திகள்
ராகுல் காந்தி நடைப்பயணம் குறித்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே
தேசிய செய்திகள்

ராகுல் காந்தி நடைப்பயணம் குறித்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே

தினத்தந்தி
|
25 Dec 2022 11:18 AM IST

ராகுல் காந்தி நடைப்பயணம் குறித்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? என்று மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை, நாடு முழுவதும் பரவலான அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

ராகுல் காந்தி நடைப்பயணம் குறித்து மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது:-

இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பு ராகுல் காந்திக்கு ஒருபோதும் கிடைக்காது. 2024 தேர்தலில் நாங்கள் (என்டிஏ) 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால், ராகுல் காந்தி எப்படி பிரதமராக முடியும்?. 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களுக்கு மேல் பெறாது.

ராகுல் காந்தி நடைப்பயணம் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? நாங்கள் சிறிதும் பயப்படவில்லை. நரேந்திர மோடி நமது வலிமையான பிரதமர். அவரது தலைமையில் நாடு வேகமாக முன்னேறி வருகிறது, வளர்ச்சியின் திசையில் செல்கிறது, நாங்கள் பயப்பட ஒன்றுமில்லை. காங்கிரஸ் கட்சிதான் பயத்தில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்