சீதா, அக்பர் - சிங்கங்களின் பெயரை மாற்ற உத்தரவு
|சிலிகுரி உயிரியல் பூங்காவில் சீதா, அக்பர் சிங்கங்களின் பெயரை மாற்ற மேற்கு வங்க அரசு மற்றும் பூங்கா நிர்வாகத்திற்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா,
திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரி சபாரி உயிரியல் பூங்காவிற்கு கடந்த 12-ம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் உள்ள 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும் 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயர் வைத்துள்ளனர்.
இந்தநிலையில் 'சீதா' மற்றும் 'அக்பர்' என பெயர் வைக்கப்பட்டுள்ள சிங்கங்களை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சவுகதா பட்டாச்சாரியா,உங்களின் சொந்த செல்லப்பிராணிகளுக்கு அக்பர்,சீதா பெயர்களை நீங்கள் சூட்டுவீர்களா? என அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி கேள்வி எழுப்பினார்.
மேலும்,விலங்குகளுக்கு புதிதாக வைக்கப்படவுள்ள பெயர் இந்து, கிறிஸ்தவர்,இஸ்லாமியர்,மத போராளிகள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயர்களையும் இனி விலங்குகளுக்கு வைக்கவேண்டாம் எனவும் சிங்கங்களுக்கு வேறு பெயரை வையுங்கள் என மாநில அரசிற்கு அவர் உத்தரவிட்டார்.
அக்பர் என்பது புகழ்பெற்ற முகலாய மன்னரின் பெயராகும். ராமாயணத்தில் ராமரின் மனைவி பெயர் சீதா என்பது குறிப்பிடத்தக்கது.