< Back
தேசிய செய்திகள்
செங்கோல் விவகாரத்தில் இந்திய பண்பாட்டை காங்கிரஸ் ஏன் புறக்கணிக்கிறது.? அமித் ஷா கேள்வி
தேசிய செய்திகள்

செங்கோல் விவகாரத்தில் இந்திய பண்பாட்டை காங்கிரஸ் ஏன் புறக்கணிக்கிறது.? அமித் ஷா கேள்வி

தினத்தந்தி
|
26 May 2023 12:44 PM IST

பழமையான திருவாடுதுறை ஆதீனத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக அமித் ஷா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

புதிதாக திறக்கப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியிருந்தார். நாடு சுதந்திரம் அடைந்த போது நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் எனவும், நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகர் இருக்கை முன் செங்கோல் நிறுவப்பட உள்ளதாகவும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்து இருந்தார்.

இதனிடையே, செங்கோல் தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கருத்துமோதல்கள் நிலவி வருகின்றன. இந்த நிலையில், செங்கோல் விவகாரத்தில் காங்கிரசின் கருத்தை எதிர்த்து அமித் ஷா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், செங்கோல் விவகாரத்தில் இந்திய பண்பாட்டை காங்கிரஸ் ஏன் புறக்கணிக்கிறது என கேள்வியெழுப்பியுள்ளார். நேருவுக்கு தமிழகத்தின் சைவ மடத்தால் வழங்கப்பட்ட செங்கோலை ஊன்றுகோலாக்கியது காங்கிரஸ் என தெரிவித்துள்ளார்.

பழமையான திருவாடுதுறை ஆதீனத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக கூறியுள்ள அமித் ஷா, ஆதீனத்தின் வரலாற்றை போலி என காங்கிரஸ் தெரிவிப்பது அவர்களது நடத்தையை காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்