< Back
தேசிய செய்திகள்
முல்லை பெரியாறு அணை உடைந்தால் யார் பொறுப்பு?  மத்திய மந்திரி சுரேஷ் கோபி
தேசிய செய்திகள்

'முல்லை பெரியாறு அணை உடைந்தால் யார் பொறுப்பு? மத்திய மந்திரி சுரேஷ் கோபி

தினத்தந்தி
|
19 Aug 2024 3:01 AM IST

முல்லைப் பெரியாறு அணை இடிந்தால் யார் பொறுப்பு? என்று மத்திய மந்திரி சுரேஷ்கோபி எழுப்பிய கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகரும், மத்திய பெட்ரோலியம், சுற்றுலாத்துறை இணை மந்திரியுமான சுரேஷ் கோபி கூறியதாவது:-

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கவலை எழுப்பும் சமூக வலைதளப் பதிவு ஒன்றை அண்மையில் பார்த்தேன். அணை இடிந்து விழுமா, இல்லையா என்ற கேள்வி என் மனதில் ஏற்படுகிறது. ஒருவேளை அணை உடைந்தால் யார் பொறுப்பு? அணையில் தண்ணீர் நிரப்புவதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிடும் கோர்ட்டு பொறுப்பேற்குமா? அல்லது அந்த உத்தரவுகளை அமல்படுத்தும் அதிகாரிகள் பொறுப்பேற்பார்களா? விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்விக்கு பதில் வேண்டும். மீண்டும் ஒரு மிகப்பெரிய பேரழிவை எதிர்கொள்ளும் சக்தி கேரளாவுக்கு இல்லை" இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்