< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மிசோரமில் யாருக்கு வெற்றி வாய்ப்பு - வெளியானது கருத்துக்கணிப்பு..!
|30 Nov 2023 7:19 PM IST
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
அய்ஸ்வால்,
தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
ஜன் கீ பாத் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் சோரம் மக்கள் இயக்கம் (ZPM) 15-25 இடங்களை கைப்பற்றும் என்றும் மிசோ தேசிய முன்னணி (MNF) 10-14 இடங்களை கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் 5-9 இடங்களை பிடிக்கும் என்றும் பாஜக 0-2 இடங்களை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.