< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பார்க்கிங் செய்ய முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஹோட்டலுக்குள் புகுந்து விபத்து.. அதிர்ச்சி காட்சிகள்
|26 March 2023 9:49 PM IST
கேரள மாநிலம் பாலக்காட்டில், பார்க்கிங் செய்ய முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் உணவகத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
பாலக்காடு,
கேரள மாநிலம் பாலக்காட்டில் ஹோட்டலுக்கு வெளியே ஓட்டுநர் ஒருவர் காரை பார்க்கிங் செய்ய முயன்றுள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்பாராதவிதமாக ஹோட்டலுக்குள் புகுந்து.
இதனால், ஹோட்டலுக்குள் இருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்து ஓடினர். ஹோட்டல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு கார் உள்ளே புகுந்த விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.
கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஹோட்டலில் புகுந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.