உங்களுக்கு வயது முதிர்கிறது என தெரியும்போது... இன்ஸ்டாகிராமில் மத்திய மந்திரி இரானி வெளியிட்ட பதிவு
|ஒரு மனைவியின் வாழ்க்கை என்ற ஹேஷ்டேக்குடன் மத்திய மந்திரி இரானி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவை நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர்.
புதுடெல்லி,
மத்திய மந்திரி இரானி தனது சமூக ஊடகத்தில் அவரது அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது போன்ற வாசகர்களை கவரும் வகையிலான காட்சிகள், பதிவுகளை வெளியிடுவது வழக்கம்.
சில வாரங்களுக்கு முன்பு, தனது இன்ஸ்டாகிராமில், அவர் சமையல் செய்த விவரங்களை வெளியிட்டார். அதில், மந்திரி இரானி சமையல் அறையில் லட்டு தயாரிப்பில் ஈடுபடும் புகைப்படம் காணப்பட்டது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவரை இன்ஸ்டாவில் பின்தொடருகின்றனர்.
இந்நிலையில், மற்றொரு பதிவொன்றை அவர் வெளியிட்டு உள்ளார். அதில், முக கவசம் அணிந்தபடி பொருட்களை வாங்குவதற்காக அவர் ஷாப்பிங் சென்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
அந்த பதிவில், உங்களது வீட்டில் உள்ளவர்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்குவதற்காக ஓடும்போது வயது முதிர்வது உங்களுக்கு தெரிய வரும்.
எனினும், விடுமுறையை கொண்டாடி வரும் உங்களது விருப்பத்திற்கு உரிய நபர்களுக்காக நீங்கள் ஓடுகிறீர்கள் எனும்போது, அது அதிகம் விரும்பத்தக்கது என்று அவர் தெரிவித்து உள்ளார். இதனை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இந்த பதிவை நெட்டிசன்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.