< Back
தேசிய செய்திகள்
கர்நாடக முதல்-மந்திரி அறிவிப்பு எப்போது...? டெல்லியில் சித்தராமையா அளித்த பதில்
தேசிய செய்திகள்

கர்நாடக முதல்-மந்திரி அறிவிப்பு எப்போது...? டெல்லியில் சித்தராமையா அளித்த பதில்

தினத்தந்தி
|
15 May 2023 10:53 PM IST

கர்நாடகாவில் முதல்-மந்திரி பற்றிய அறிவிப்பு எப்போது வெளிவரும் என்பதற்கு டெல்லியில் சித்தராமையா பதில் அளித்து உள்ளார்.

புதுடெல்லி,

கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆட்சியமைக்கும் அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, அக்கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் நேற்று கூடி ஆலோசனை மேற்கொண்டு இறுதி அறிக்கையை கட்சி மேலிடத்திற்கு வழங்கி உள்ளது.

அந்த அறிக்கையை கொண்டு கட்சி தலைமை ஆலோசித்து, முடிவு செய்து கர்நாடக முதல்-மந்திரி யாரென்று அறிவிக்க உள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமையை சந்திப்பதற்காக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியான சித்தராமையா டெல்லிக்கு இன்று மதியம் புறப்பட்டு சென்றார். அவர் இன்றிரவு டெல்லியை சென்றடைந்து உள்ளார்.

அவரிடம், கர்நாடகாவில் புதிய அரசு எப்படி இருக்கும் என்றும் முதல்-மந்திரி அறிவிப்பு எப்போது நடைபெறும்? என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனக்கு தெரியவில்லை என கூறி விட்டு சென்றுள்ளார். இதனால் நாளை காலையிலேயே இந்த விவகாரத்தில் முடிவு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்