< Back
தேசிய செய்திகள்
பஸ்சில் பெண்கள் இருக்கையில்   ஆண்கள் பயணம்; ரூ.17 ஆயிரம் அபராதம்
தேசிய செய்திகள்

பஸ்சில் பெண்கள் இருக்கையில் ஆண்கள் பயணம்; ரூ.17 ஆயிரம் அபராதம்

தினத்தந்தி
|
13 Jun 2022 2:54 AM IST

பஸ்சில் பெண்கள் இருக்கையில் பயணம் செய்த ஆண்களுக்கு ரூ.17 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது

பெங்களூரு: பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்கள் பயணம் செய்யும் பெண்களுக்காக தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள பெண்களுக்கான இருக்கையில் அமர்ந்து செல்லும் ஆண்களுக்கு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெங்களூருவில் போக்குவரத்து கழக ஊழியர்கள், நடத்திய சோதனையில் 170 ஆண்கள் பல்வேறு பஸ்களில் பெண்களுக்கான இருக்கையில் அமர்ந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பயணிகளிடம் இருந்து ரூ.17 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பி.எம்.டி.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்