பலூனுக்கு காற்றடித்தபோது சிலிண்டர் வெடித்து 4 பேர் உயிரிழப்பு !
|விபத்து குறித்து ஜோய் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் தெற்கு பர்கானா மாவட்டத்தில் உள்ளது பந்த்ரா கிராமம். கொல்கத்தாவில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் முச்சிரம் மோண்டல் (வயது 35) என்பவர் பலூன் விற்க சென்றுள்ளார்.
அவர் பலூன்களை கியாஸ் சிலிண்டர் உதவியுடன் ஊதிக் கொடுப்பது வழக்கம். இரவில் பலூன் விற்றுக்கொண்டிருந்தபோது சிறுவர்கள் பலூன் வாங்க வந்திருந்தனர்.
பலூனுக்கு காற்றடித்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் பலூன் வாங்க வந்திருந்தவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் பலூன் வியாபாரி மோண்டல், சிறுவர்கள் ஷகின் முல்லா (13), அபிர் காசி(8), குத்புதின் மிஸ்திரி (35) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்த மேலும் சிலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து குறித்து ஜோய் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.